அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - வரலாறு


தோற்றம் :

        எல்லா மலைகளையும் இமயத்துடன் தொடா;புபடுத்திக் கூறுவது நம் நாட்டு வழக்கம். சிவன்மலைக்கும் அவ்வகையான பழந்தொடா;பு ஒன்று கூறப்படுகிறது.திhpபுர சம்உறாரத்தின்போது சிவபெருமான் வாசுகியைக் கணையாக வைத்து சேருமலையை வில்லாக வளைத்தார். அப்போது மேரு மலையின் சிகரங்களில் ஒன்று காங்கய நாட்டில் விழுந்தது.


இலக்கியங்களில் சிவமலை :

        சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை, சிவசைலம், சிவநாகம், சிவகிரி என்று பல பெயாகளாலும் குறிக்கப்பட்டுள்ளது.


புலவர்கள் :

        “தெரிதமிழ்தேர் சிவமலை" “செல்வச்சிவமலை" “வடித்த செந்தமிழ்ச் சிவாத்திரி" “வலிமைசோர் சிவாசலம்" “புவனம் பரவும் சிவமலை".

“கல்யாணசிவமலை" “இருநிதி சூழ் சிவமலை" “மகிமைசேர் சிவமலை" “தவசுபுரி சிவமலை".என்றெல்லாம் புகழ்ந்து சிவன்மலையைப் பாடிப் பரவியுள்ளனா. பார்வதிதேவியார் எழுந்தருளிய காரணத்தால் “சத்திகிரி" எனப்பெயார் பெற்றது. “சத்திசிவகிரி" என்பதும் வழக்கம்.


திருநாமங்கள் :

        சிவமலை முருகனைச் சுப்பிரமணியர், சிவசுப்பிரமணியர், கல்யாண சிவசுப்பிரமணியார், காங்கயன், கந்தசுவாமி, வேலன், வேலுசாமி, முத்தய்யன், முருகையன், சிவாசலபதி, குகன், சிவாசலவேந்தன், சிவாத்திரிநாதன், வள்ளிமணாளன், கந்தவேள், குமரன், துரைசாமி, மரகதமயூரன் என்று பல்வேறு பெயார்களில் அழைத்துள்ளனார்.

        இப்பெயார்களில் எப்பெயரிட்டு அழைத்தாலும் சுப்பிரமணியார் அதனை மிக உவப்பாக ஏற்றுக்கொள்வார். மலையை வணங்கினாலே சிவன்மலையாண்டவரை வணங்கியபேறு பெறலாம.

        சிவன்மலைச் சிறப்புகள் மலையைச் சுற்றிலும் அட்ட துர்க்கை இருப்பதாகக் கூறுவர். ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை) பாப்பிணி அங்காளபரமேஸ்சுவர், காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அத்தனூரம்மன், கர்யகாளியம்மன், செல்வநாயகி என்று எட்டு அம்மன் பெயர்களைக் சூழ்ந்துள்ள எட்டு இடங்களுக்குக் கூறுகின்றனர்.

        இதனைக் குறவஞ்சி, அட்டதுர்க்கை எட்டுப் பத்திரகாளியும் ஓர் எட்டுத் திக்கும் காவல்மலையே அட்டநாகம் அட்ட குலங்கள் குலபருவதமோர் எட்டும் சுற்றும் தாங்கும்மலையே| என்று கூறுகிறது.

        496 படிகள் சிவன்மலையில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை அமைந்துள்ளது. படிக்கட்டில் உள்ள பாலவிநாயகார் கோயிலைப் பழையகோட்டை சின்ன அரண்மனை பார்வதி அர்ஜீனன் அவார்களும், அவார்கள் தாயார் வெளர்ளக்கிணறு மீனாட்சியம்மாள் அவார்களும் 1966 ஆம் ஆண்டு கட்டி வைத்துள்ளார். பதினெட்டாம் படியைச் சத்தியப்படி என அழைப்பார். அங்கு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இப்பதினெட்டாம்படி புராணப்படி என்றும் அழைக்கப்பெறும். இங்குதான் சடைச்சியம்மன் வழிபட்டதும், குடியிருப்பதுமாகும் என்று குறவஞ்சியில் கூறப்படுகிறது. இங்கு அர்த்தமேரு அமைக்கப்பட்டுள்ளது அதன்மேல் திருவடிகள் உள்ளன.

        பிற இடங்களில் விநாயகருக்கு முதல் பூசை நடத்தே மற்ற தெய்வங்களுக்குப் பூசை நடக்கும். ஆனால் சிவன்மலையில் முதலில் முருகனுக்கே பூசை நடைபெறுகிறது. விநாயகப் பெருமானே முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்று சிவாச்சாரியார்கள் கூறுகின்றார்.

        வடக்கே தலையும் தெற்கே தோகையும் இருந்தால் தேவமயில் என்றும், வடக்கே தோகையும் தெற்கே தலையும் இருந்தால் அசுர மயில் என்றும் கூறுவர். சிவன்மலையில் தேவ மயிலே உள்ளது.

        சூரியனைப் பார்த்து எல்லா நவக்கிரங்கள் இருப்பதும் இந்தத் தலத்தின் விசேடமாகும்.

        மலைப்படிகளின் வழியாக அன்பர்கள் நடந்து சென்றால் அவர்கள் தங்கி ஓய்வெடுக்கப் பல அழகிய மண்படங்கள் பழையதும் புதியதுமாக உள்ளன. பாத விநாயகர் மண்டபம் பழையகோட்டை மண்டபம் அருளாடிகள் மண்டபம் பழைய கோட்டை சின்ன அரண்மனை மண்டபம் (பால விநாயகர் கோயிலுடன்) சிலம்பகவுண்டன்வலசு வெங்கட்ரமணசாமிக் கவுண்டர் மண்டபம் பொன்னப்ப செட்டியார் வகையறா மண்டபம் சோமசுந்தரக் குருக்கள் மண்டபம் நாலுகால் மண்டபம் வெள்ளக்கிணறு வெள்ளியங்கிரிக் கவுண்டர் வகையரா மண்டபம் காங்கயம் கதிர்வேல் முதலியார் மண்டபம் தாராபுரம் நரசிம்மன் மண்படம் ராமலட்சுமியம்மன் மண்டபம் .போன்ற பல மண்டபங்கள் உள்ளன. இவ்வயைன மண்டபங்களை கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள் ~கற்பந்தல்| என்று சிறப்பிக்கிறது.

        சிவன்மலைமேல் கோயிலுக்கு வெளியே தீபத்தம்பம் உள்ளது. தீபத்தம்பத்தில் கிழக்கில் விநாயகரும், தெற்கில் சூலமும், மேற்கே தண்டபாணியும், வடக்கே மயிலும் உள்ளனர். தீபத்தம்பம் மண்டபத்துடன் உள்ளது.

        உள்ளே நுழைந்தால் தெற்குப் பிரகாரத்தில் கைலாசநாதர் ஞானாம்பிகை திருக்கோயில் கிழக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். நவகன்னியருக்கும், நவவீரர்களுக்கும், இங்கு தவமிருந்த உமாதேவியாருக்கும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி அருள் கொடுத்தவர் கைலாசநாதர்.

        எனவே இத்தலத்தில் கைலாசநாதர் தொடர்பு மிகப் புராதனமானது. தலபுராணத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கும் முன்னர் கைலாசநாதருக்கும் ஞானாம்பிகைக்கும் வணக்கும் கூறப்படுகிறது. எதிரில் புளியமரம் உள்ளது. கன்னிமூலை விநாயகர் தென்மேற்கிலும், தண்டபாணி வடமேற்கிலும் மேற்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ளனர். சனிபகவான், நவககிரகக் சன்னதிகளைக் கடந்து கொடிமரம், மயில்வாகக் குறடு, பலிபீடம் கடந்து சென்று சுமுகர் சதேகர் எனும் துவார பாலகர்களைக் கடந்த சுப்பிரமணியரை வணங்கிப் பேறு பெறலாம். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாய்க் கருவறையில் வள்ளியோடு சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். பின்னர் சுப்பிரமணியார், வள்ளி தெயவானைத் திருக்கோலத்தை கண்டு வணங்கி வேண்டியவற்றை வேண்டியாங்கு பெற்று வாழ்வாங்கு வாழலாம்.