அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - சேவைகள்


அன்னதானம் :

         இத்திருக்கோயிலில் தினசரி நண்பகல் 12.15 மணியளவில் திருக்கோயிலுக்கு வரும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விசேச நாட்களில் மட்டும அப்பளம் பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 23.3.2002 முதல் செயல்பட்டு வருகிறது.

         அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.2,000 ஐ திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.20,000 ஐ முதலீடாகச் செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தொகை செலுத்துவதன் மூலம் வருமானவரிச் சட்டம் 80 (ஜி) ன் கீழ் வரிவிலக்கும் பெறலாம்.


கருணை இல்லம் :

        ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப் பயில, திருக்கோயிலின் சார்பில்,; கருணை இல்லம் கட்டப்பட்டு பராமரிப்புச் செலவை ஆலய நிர்வாகமே செய்து வருகிறது. இங்கு தற்போது 25 ஆதரவற்ற மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு நடு;நிலைபள்ளி வரை கல்வி பயில திருக்கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டு வருகிறது.

        அன்பளிப்புகள் காசோலை மற்றும் வரையோலை மூலம் வரவேற்கப்படுகின்றன.


மலைப்பாதை போக்குவரத்துகள் :

        கடலெனத் திரண்டு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு மனங்கவரும் மலைப்பாதை அமைக்கப்பட்டு மூன்று பேருந்துகள் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. மலைச்சாலையிலும், படிக்கட்டுகளிலும் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பகலில் மட்டுமின்றி இரவிலும் வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.